fbpx
Homeபிற செய்திகள்ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை தொடங்கி வைத்த கோவை...

ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98க்குட்பட்ட வ.உ.சி காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் உதயகுமார், நிர்வாக அலுவலர் மாணிக்கம், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் சபரிராஜ், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img