fbpx
Homeபிற செய்திகள்அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிப்பு: சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும் -...

அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிப்பு: சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும் – கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொடிசியா கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் நேற்று (ஆக.9) கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மை செயலாளர்/ வணிக வரித்துறை ஆணையர் எம்.ஏ.சித்திக், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 15 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களான கொடிசியா வளாகம், காருண்யா கல்லூரி, மத்தம்பாளையம், பாரதியார் பல்கலைகழகம் உள்ளிட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 13 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையம் 1800 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம், கருப்பு பூஞ்சை சிகிச்சை பிரிவு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஆகிய பகுதிகளில், கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் மற்றும் போதியஅளவு ஆக்ஸிஜன் உற்பத்தி நி¬ லயங்களை அமைக்கவும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்து வமனை யில் கொரோனா சிகிச்சை பிரிவு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி அளவு குறித்து மருத்துவ க்கல்லூரி மருத்து வமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.

கொடிசியா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை விரைந்து சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வருமான வரித்துறை இணை ஆணையர் மெர்சிரம்யா அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர்.மரு.ரவீந்திரன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img