fbpx
Homeபிற செய்திகள்அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய கோவை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ரோபோலிஸ்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய கோவை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ரோபோலிஸ்

நம் வாழ்க்கையை வடி வமைக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக “தேசத்தை உருவாக்குபவர்” விருது (NATION BUILDER AWARDS) வழங்கப்பட்டது.
செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடெங்கும் கொண் டாடப்படுகிறது.

இதனையொட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோ போலீஸ் 4-வது பதிப்பான “தேசத்தை உருவாக்குபவர்” விருது வழங்கும் விழா, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5 பேரின் அர்ப் பணிப்பு, சேவையை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

கே.கே.புதூர், மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆர். சகுந்தலா, சுந்தராபுரம், ஸ்ரீசாரதா வித்யாலயம் உதவி பெறும் தொடக்கப்பள்ளி, எஸ்.மேரி ஜெயகுமாரி, கணுவாய் அரசு உயர் நிலைப்பள்ளி, டி.கௌரி நாயகி, காடம்பாடி, அரசு மேல்நிலைப்பள்ளி என்.வளர்மதி, சித்தா புதூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி கே.பத்மாவதி ஆகியோர் அர்ப்பணிப்பு, தொழில் மீதான பற்று உள்ளிட்டவற்றிற்காக இவ்விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ரோபோலிஸ் சார்பில் “தேசத்தை உருவாக்குபவர்கள்” விருதும், தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

சிறப்பு விருந்தினராக சுந்தரவடிவேலு பங்கேற்று, வளரும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஆசிரியர்க ளின் முக்கியமான பங்கு பற்றி டாக்டர் ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசினார்.

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ரோபோலிஸ் தலைவர் ஆர்.சாந்திசுரேஷ், செயலாளர் வசந்தி ரங்க நாத், உதவி ஆளுநர் சஞ்சய் ஷா, திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய குமார் உள்ளிட்டோர் ஆசி ரியர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img