நாடெங்கிலும் இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியிருப்பதோடு, Amazon.in தளத்தில் விற்பனையாளர்களோடு, விற் பனையாளர்கள் மற்றும் பிராண்டு பார்ட்னர்களுக்கு மிகப்பெரிய ஷாப்பிங் கொண்டாட்டத்தை ஒரு மாத காலம் நடைபெற்ற கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (GIF) 2022 உறுதி செய்திருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22 நள்ளிரவின்போது, GIF 2022 தொடங்கியது மற்றும் செப்டம்பர் 23 அன்று அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்துமாறு அது மாறியது. இலட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMBs)தனித்துவமான தயாரிப்புகளையும் கூடAmazon.in தளத்தில் விற்பனையாளர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான தயாரிப்புகள், வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றன.
‘இந்த திருவிழா சீசனுக்கு வாடிக்கையா ளர்களுக்கு சேவையாற்றவும் மற்றும் விற்பனையாளர்களின் விற்பனையை ஏதுவாக்கவும் கிடைத்த வாய்ப்பு எங்களுக்கு மனத்திருப்தியை வழங்கியிருக்கிறது.
இந்தியா முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறு, நடுத்தர பிசினஸ் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்கள் உட்பட எண்ணற்ற விற்பனையாளர்கள் வழங்கிய தயாரிப்புகளின் தொகுப்பு மிகப்பெரியது. இந்த சீசனுக்கு பிரைம் உறுப்பினர்களாக புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை, அதுவும் குறிப்பாக 2,-3 -ம் அடுக்கிலுள்ள நகரங்களிலிருந்து, அதிகரித்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
பெரிதும் விரும்பும் ஆன்லைன் ஷாப்பிங் அமைவிடமாக அமேசான் மீதான அவர்களது நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உறுதிசெய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவிற்கு வாடிக்கையாளர்கள் அளித்த வரவேற்பு Amazon se liya’ என எதிரொலித்திருக்கிறது’ என்று அமேசான் இந்தியாவின் தேசிய மேலாளர் மணீஷ் திவாரி கூறினார்.
இந்த திருவிழா காலத்தின்போது 4000-க்கும் அதிகமான விற்பனையாளர்களுக்கு 5 மடங்கிற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சி காணப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு நொடிக்கும் 25 தயாரிப்புகள் விற்கப்பட்டிருக்கின்றன.
அமேசான் சஹேலி வழியாக விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவோர்கள், ஒவ்வொரு நிமிடத்திற் கும் 6 தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளனர்.
அமேசான் ஃபேஷன் மற்றும் பியூட்டி பிரிவுகளில் 15 இலட்சத்திற்கும் கூடுதலான புதிய வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்திருக்கின்றனர்; இவர்களுள் 85%-க்கும் அதிகமானவர்கள் 2-வது அடுக்கைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் அவற்றிற்கு அப்பாலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.