Homeபிற செய்திகள்அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு-கோவையில் இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு-கோவையில் இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத் தப்பட்டு வருகிறது.

இந்நி லையில் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாநில துணை தலைவர் நிரூப் தலைமையில் கோவை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் இத்திட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசிற்கு எதிராகவும் பதாகை களை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத் தியும் ரயில் முன்பிருந்து கலைந்து செல்லாததால் காவல்துறையினர் வலுக் கட்டாயமாக அவர்களை இழுத்துச் சென்றனர்.

அப்போது காவல்துறை யினருக்கும் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் நிலவியது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை வேறு வழியில் கைது செய்து அழைத்து சென்ற னர்.

இதனால் ரயில் நிலை யத்திற்குள்ளும் ரயில் நிலை யத்திற்கு வெளியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட செயலா ளர் தினேஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img