Homeபிற செய்திகள்அகில இந்திய கனரா வங்கி ஓபிசி ஊழியர்கள் நல சங்க கூட்டம்- ஓபிசிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து...

அகில இந்திய கனரா வங்கி ஓபிசி ஊழியர்கள் நல சங்க கூட்டம்- ஓபிசிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து விளக்கம்

அகில இந்திய கனரா வங்கி ஓபிசி ஊழியர்கள் நலச் சங்க (AICBOBCEWA) உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தொழிற் சங்கவாதியும் சங்க நிறுவனரும், ஆலோசகருமான ஜி.வி.மணிமாறன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

அகில இந்திய கனரா வங்கி ஓபிசி ஊழியர்கள் நலச் சங்க வழி காட்டியான கே.ஆர்.ஏ.முருகன் பங்கேற்று, ஓபிசிகளின் வரலாறு மற்றும் அனைத்து துறைகளிலும் ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.

சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் இ.ஸ்ரீராம், துணைத் தலைவர் எஸ்.தனசேகர், துணைத் தலைவர் ஏ.என்.கணபதி முருகன், இணைப் பொதுச் செயலாளர் எஸ்.ரஹ்மத் ராஜா, துணை பொதுச் செயலாளர் அமுதன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் வங்கியில் உள்ள ஓபிசிகளின் நலன் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

இதில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தலைவர்களுடன் தங்கள் குறைகளை விவாதித்ததுடன், ஓபிசி களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அவர்களின் அதிகாரம் குறித்தும் கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.

இக்கூட்டத்தை சங்க துணைப் பொதுச்செயலாளர் ஏ.சங்கரலிங்கம் தொகுத்து நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img