வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை பகுதி பொதுமக்களின் நலன் கருதி புதிய வழிதடங்களில் பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



