fbpx
Homeபிற செய்திகள்விவோ எக்ஸ்70 புரோ+ ஸ்மார்ட் போன் அறிமுகம் பண்டிகைகளை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு

விவோ எக்ஸ்70 புரோ+ ஸ்மார்ட் போன் அறிமுகம் பண்டிகைகளை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு

உலக அளவில் சிறந்த ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ புதிதாக அறிமுகம் செய்த எக்ஸ்70 மாடலின் எக்ஸ்70 புரோ ஸ்மார்ட் போன், எக்ஸ்70 புரோ பிளஸ் ஸ்மார்ட் போன் ஆகியவை தற்போது விற்கப்படுகின்றன.

வரவிருக்கும் பண்டிகை களையொட்டி விவோ நிறுவனம் அதன் வாடிக்கை யாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது.

புதிய எக்ஸ்70 புரோ மற்றும் எக்ஸ்70 புரோ+ ஸ்மார்ட் போன் களில் அல்ட்ரா-சென்சிங் சிம்பல் மற்றும் விவோவின் புரபஷனல் இமேஜிங் வி1 சிப் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்70 புரோ ஸ்மார்ட் போன் விற்பனை தற்போது துவங்கி உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கார்டு உடன் கூடிய இதன் விலை ரூ.46,990. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் 49,990 ரூபாய்க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கார்டுடன் 52,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

மற்றொரு மாடலான எக்ஸ்70 புரோ பிளஸ் விற்பனையும் துவங்கி விட்டது. 12ஜிபி ரேம் மற்றும் 256 மெமரி கார்டுடன் கூடிய இதன் விலை ரூ.79,990.
இந்த 2 ஸ்மார்ட் போன்களும் விவோ இந் தியா இ-ஸ்டோர், பிளிப் கார்ட் ஆகிய இணைய தளங்கள் மூலமும், இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

எக்ஸ்70 புரோ பிளஸ் எனிக் மாபிளாக் மற்றும் எக்ஸ்70 புரோ காஸ்மிக் பிளாக் மற்றும் அரோராடான் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.

ஆப்லைன் ஸ்டோரில், சிட்டி வங்கி, கொடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கியின் கிரெ டிட் கார்டு மற்றும் தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகைவழங்கப்படுகிறது.

வி-ஷீல்டு சலுகை – 6 மாதங்களுக்கு முழுமையான மொபைல் பாது காப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் எக்ஸ்70 ஸ்மார்ட் போன் விற்பனையை துவக்கி உள்ள விவோ நிறுவனம் விவோ எக்ஸ் கேர் என்னும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img