fbpx
Homeபிற செய்திகள்வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வித்யாதன் உதவிப் பணம் பெற பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாண வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பிளஸ் 1 (11-ம் வகுப்பு) மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குகிறது. இரண்டு லட் சத்திற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், நடப்பு கல்விஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இதை பெற தகுதியுடையவர்கள்.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் எஸ்.டி.ஷிபுலால் (இன்போசிஸ்), குமாரி ஷிபுலால் (காப்பாளர்), கட்டமைப்பு பெற்று வித்யாதன் உதவிப் பணம் நிகழ்ச்சியின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்த உதவிப் பணம் பெறும் திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் 11-ம் வகுப்பு பயில்வோர் பயன் அடைவர். பத்தாம் வகுப்பு 2022 பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் மேலும், உடல் ஊனமுற்றோருக்கு 60% மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்மூலம் ஆகஸ்ட்15-க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல்களுக்கு vidyadhan.tamilnadu@sdfoundationindia.com vidyadhan.tamilnadu@sdfoundationindia.com முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 07339659929 \ 8792459646 ஜேக்கப்பை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img