இந்த ஆண்டு ஜூன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிகர லாபம் பன்மடங்குஉ யர்ந்திருப்பதை விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் அறிவித்திருக்கிறது.நடப்பு நிதியாண்டின் முத ல் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.2.59 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டி ன்போது இந்நிறுவனத்தின் நிகரலாபம்ரூ.0.33 கோடி என இருந்த நிலையில் இந் நிதியாண்டில் நிகரலாபம் 680 சதவிகிதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றி ருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் (ஙிஷிணி) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் வருவாய், 2022 ஜூன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் 280 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ரூ.92.17 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு இதே காலாண்டு அளவின் போது ரூ. 24.1 கோடியாக இருந்தது. வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன் வருவாய் (ணிஙிமிஜிஞிகி) வருடாந்திர அடிப்படையில் 73 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ரூ.1.3 கோடி என உயர்ந்திருக்கிறது.
எனினும், ஜூனில் முடிவடைந்த காலாண்டில் இந் நிறுவனம் ரூ.22.98 கோடி என்ற நிகர லாபத்தையும் மற்றும் ரூ.102.59 கோடி வருவாயையும் ஈட்டியிருப்பதாக இதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிறுவனம் தாக்கல் செய்த மற்றொரு ஒழுங்குமுறை ஆவணத்தில், பழைய பங்குகளை வைத்திருக்கும் விகிதாச்சாரத்தில் அதன் தற்போதைய பங்குதாரர் களுக்கு ஒரு நிறுவனம் சிறப்பு விலையில் வழங்கும் பங்குகளின் வெளியீட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதில் எந்த பிறழ்வுகளும், விதிமீ றல்களும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 2021 ஜூன் 22 அன்று வெளியிட்ட இந்த சிறப்பு விலை பங்குகள் வெளியீட்டின் வழியாக இந்நிறுவனம் ரூ.49.1 கோடி நிதியை திரட்டியிருந்தது.
இந்தியாவில் பிளாஸ் டிக் தொழில்துறையோடு தொடர்புடைய பல்வேறு இரசாயனசேர்மங்கள், பாலிமர்கள், பிவிசி ரெசின்கள், பிளாஸ்டிக் கிரானுயூல்கள் மற்றும் தயாரிப்புபொருட்களின் வர்த்தகத்தில் விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட், வர்த்தகம் – பாலிமர்ஸ், வர்த்தகம் -முந்திரிப்பருப்பு மற்றும் உற்பத்தி பிரிவுகள் ஆகிய வெவ்வேறு துறைகளின் வழியாக இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.



