fbpx
Homeபிற செய்திகள்வடக்கு மண்டலப் பகுதி வளர்ச்சிப் பணிகள்: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

வடக்கு மண்டலப் பகுதி வளர்ச்சிப் பணிகள்: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று(செப்.2) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.44, கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு, நுண்ணுயிர் உரம் தயாரிக்கப் பட்டு வரும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆணையாளர்.

வார்டு எண்.41-க்கு உட்பட்ட மணியகாரன் பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளை பள்ளியின் நுழைவு வா யிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி அனுப்ப வேண்டும்.

அ¬ னவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அப்பள்ளி வகுப்பறைகள், ஆய்வகம், கணினி அறை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

மாணவ, மாணவிகளின் வருகை குறித்தும், பள்ளியில் சமூக இடை வெளியை கடைபிடிப்பது குறித்தும் கேட்டறிந்தார்.
சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் பள்ளியை தூய் மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வார்டு எண்.41, மணி யகாரன் பாளையத்தில் உள்ள அம்மா உண வகத்தில் ஆய்வு மேற் கொண்டார். அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில், தரமான உணவுகளாக வழங்கப்படுவதையும், உண வுப் பொருட்கள் இருப்பு குறித்தும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

காந்திமாநகர் பகுதி யில் கழிவுநீர் உந்து நிலையத்தின் செயல்பாடுகளானகழிவுநீர்வெளியேற்றும்பணிகள்நடைபெற்றுவருவதைஆய்வுமேற்கொண்டார். அப்பகுதியில் நடைபெற்று வரும் தார்சாலைப் பணிக ளுக்காக போடப்படும் கற் சாலையின் தரத்தினை குறித்து கேட்டறிந்தார்.

பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை, மாநகராட்சி ஆணையாளர் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞான வேல், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img