சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உள்ள அட்மா (ATMA) குழு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தலைவராக முன்னாள் வீரபாண்டி ஒன் றியக்குழு தலைவர் வெண்ணிலாசேகர், மற்றும் 20 உறுப்பினர்களும், உத்தமசோழபுரம் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் உழவர் நலன் குறித்தும் வீர பாண்டி வட்டத்திற்கு உட்பட்ட ATMA குழுவில் செயல்படுத்த வேண்டிய திட் டங்கள் குறித்தும் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்விழாவில் வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் கிரிஜா, வேளாண் மை அலுவலர் பிரியங்கா, துணை வேளா ண்மை அலுவலர் சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தோஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா, வேளாண்மை அலுவலர் வேளாண்மை வணிகம் தீபா பிரியதர்ஷினி, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் பவித்ரா, உதவி தோட்டக்கலை அலுவலர் வெள்ளியங்கிரி மற்றும் ஆட்டையாம்பட்டி முருகபிரகாஷ், இளம்பிள்ளை கே.பி செல் வராஜ் சீரகாபாடி முருகன் உள்ளிட்ட முன்னோடிகள், வீரபாண்டி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, கோபி, வீரப £ண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாய த்து தலைவர்கள் அருள், கோகிலா சங்கர், சின்னபொண்ணு மெய்வேல், பார்வதி ஸ்ரீராம், செந்தில், அரியானூர் ரமேஷ், பூலாவரி வேங்கையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



