fbpx
Homeபிற செய்திகள்ரூ. 4000 உதவித் தொகை, 15 வகை மளிகை பொருட்கள் - முதல்வருக்கு குமரி...

ரூ. 4000 உதவித் தொகை, 15 வகை மளிகை பொருட்கள் – முதல்வருக்கு குமரி மாவட்ட திருக்கோயில் ஊழியர்கள் நன்றி

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நல்லாசியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மாதச் சம்பளமின்றி பணிபுரிவோரின் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கியதற்கு, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை ரூ.3 குறைத்து வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் திட்டம் என முத்தான ஐந்து திட்டங்களின் கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை பிறப்பித்து பொதுமக்களுக்கு சென்றடையச் செய்தார்.

தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் தொற்று கால கட்டத்திலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார்.

போர்க்கால அடிப்படையில் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மேற்கொண்டதால், தற்போது இந்நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண உதவித் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் ஆகியவை வழங்க உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 567 மாவட்ட கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள், 137 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 20 மகளிர் அமைப்புகள், 3 சுய உதவிக் குழுக்கள், 47 இதர துறைகள் என மொத்தம் 776 நியாயவிலைக் கடைகளின் வாயிலாக சுமார் 5,51,228 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.220 கோடியே 52 இலட்சம் நிதியினை முதல்வர் ஒதுக்கீடு செய்து, இரண்டு தவணைகளாக வழங்கி முடித்துள்ளார்.

அர்ச்சகர்கள், பூசாரிகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மாதச் சம்பளமின்றி பணிபுரிவோரின் குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 85 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.4 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி, 500 கிராம் எண்ணெய், 500 கிராம் சர்க்கரை, 500 கிராம் ஆட்டா, 200 கிராம் டீ தூள், 500 கிராம் துவரம் பருப்பு, 500 கிராம் உளுந்தம் பருப்பு, 500 கிராம் கடலைப் பருப்பு, 100 கிராம் மிளகாய்த்தூள், 200 கிராம் புளி, 100 கிராம் கடுகு, 100 கிராம் வெந்தயம், 100 கிராம் மிளகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள்தூள், அப்பளம் அடங்கிய 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினால் பயனடைந்த கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில், தெலுங்கு செட்டி தெருவைச் சார்ந்த புஷ்பகுமாரி தெரிவித்ததாவது:

என்னுடைய கணவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கொரோனா காலத்தில் என் கணவருக்கு சரியான வேலை இல்லாததால், வருமானமின்றி சிரமத்தில் இருந்தோம்.

இந்நிலையில் ஏழையின் சிரிப்பே அரசின் சிறப்பு என்ற நோக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம், 15 வகையான மளிகைப் பொருட்கள் எங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய பெரும் உதவியாக இருந்தது.

இத்தகைய நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எங்களது குடும்பத்தின் சார்பாகவும், அனைத்து தரப்பட்ட மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உணவுக்கு வழி கிடைத்தது
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுடலையாண்டி (வயது 51) தெரிவித்ததாவது: ஸ்ரீ மாரிமுத்தாரம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன்.

திருக்கோவிலில் மாதச் சம்பளமின்றி பணிபுரிந்து வருகிறேன். வேறு எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. மாதச் சம்பளம் இல்லாமல் பணிபுரியம் எங்களைப் போன்ற பணியாளர்களின் நிலைமையை புரிந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களைப் போன்ற அனைவருக்கும் ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டார்.

இந்த மகத்தான திட்டத்தால் எங்களைப் போன்றவர்களுக்கு அன்றாட செலவுக்கும், உணவுக்கும் வழி கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு கால காட்டத்தில் எங்களுக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கும் எங்களது குடும்பத்தின் சார்பாகவும், அனைத்து அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறாம்.

தொகுப்பு
திரு.பா.ஜாண் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
திருமதி. எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img