கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்வராயபுரம் ஊராட்சி, சீங்கப்பதி, இக்கரைபோளுவம்பட்டி ஊராட்சி, சர்க்காபோர்த்தி ஆகிய இடங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சூரிய ஒளியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேற்று (அக்.20) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊரகப் பகு திகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திட இயலும்.
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மத்வராயபுரம் ஊராட்சி சீங்கப் பதியில் 60 பழங்குடியின குடும் பங்கள் வசித்து வருகிறார்கள்.
இக்கிராமத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலும், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட் சியில், சர்க்காபோர்த்தியில் 8 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலும், சூரிய ஒளியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடித்து உரிய காலத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
சீங்கப்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் வகுப்பறை, சமையலறை ஆகிய இடங்களில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர் சேர்க்கை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆர்.சரண்யா, மாவட்ட மண்டல அலுவலர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் என்.ஜெய்குமார், என்.சுந் தரி மற்றும் அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.



