ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்ய, ஒரே இந்தியா, ஒரே உரிமம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என கோரிக் கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் என்றழைக்கப்படும் கோ யேரியா அமைப்பின் 10 வது ஆண்டு விழா இன்று, கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்த அமைப்பின் சார்பாக புதிய லோகோ வெளியிடப்பட்டு, அதன் அருகில் அமைப்பின் நிர்வாகிகள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இது தொடர்பாக கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் என் றழைக்கப்படும் கோயேரியா அமைப்பின் தலைவர் சிவக்குமார் அளித்த பேட்டி: இந்த அமைப்பு, நேசனல் அசோசியேசன் ரியல்டர்ஸ் அமைப்பின் பிம்பமாக இயங்கி வருகின்றது. இந்த அமைப்பின் 10 ஆண்டுகால பயணம் குறித்து கோவை மக்களுக்கு தெரிய படுத்தவே இந்த கூட்டத்தை முன் னெடுத்துள்ளோம்.
இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு லோகோ வெளியி டப்பட்டுள்ளது. கோவை மாநக ரத்தின் முக்கிய தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட மக்களை அழைத்து, நாங்கள் என்ன செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்து வருகிறோம்.
இந்த அமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு இரண்டு கோரிக் கைகளை முன்வைக்கிறோம். தமிழக தொழில் துறையில், எங்களது சங்கத்தின் விண்ணப்பங்களை உடனுக்குடன் அனுமதியளித்து வருகின்றனர்.
இதற்கு தமிழக அரசுக்கு முதலில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நலிவடைந்த மக்களுக்கு வீடு வழங்குவதில் பத்திர பதிவு தொகையை குறைத்து வழங்க வேண்டும். வீட்டுமனைகளை பதிவு செய்வது போன்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கும் பத்திரப் பதிவை நீட்டித்து வரைமுறை செய்து அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளோம். அதில் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைத்து அமல்படுத்த வேண்டும், ஒரு இந்தியா ஒரு உரிமம் என்ற திட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கினால் இத்துறை மேன்மையடையும்.
கோயேரியா அமைப்பு இந்தியா முழுவதும் 45 ஊர்களில் இயங்கி வருகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கோயேரியா அமைப்பின் நிறுவன தலைவர் ஜெயராமன், உதவி தலைவர் வெங்க டேசன், செயலாளர் பிரதீஸ், இணை செயலாளர் மோகன், பொருளாளர் ரமேஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



