ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் பணிகளைக் குறித்து மேலாண்மை இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் செம்பேடு கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டதை பார்வையிட்டார்.
பின்னர் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 100 சதவீதம் 601 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. திருப்பாற்கடல் ஊராட்சியில் பொதுமக்களிடம் குடிநீர் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து திருப்பாற் கடல் அத்திப்பட்டு ஊராட்சிகளில் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து சுமை தாங்கி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் குமார், உதவி பொறியாளர் ராஜேஷ், ஜல் ஜீவன் நிர்வாக பிடிஓ கரீம், வாலாஜா பிடிஓக்கள் ரவி, சீனிவாசன், செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.



