தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரிய நாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் நகர அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கே.குருந்தாசலம்,பெ.நா.பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கோவை புற நகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து ஜெய லலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
தொடர்ந்து பெ.நா.பாளையம் நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் மலர் களால் அலங்கரித்து வைக்கப்பட் டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து மதியம் 12 மணியளவில் வீர பாண்டியில் பெரிய நாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.வி. என்.ஜெயராமன் முன் னிலையில் நடந்த அன்னதானத்தையும் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ஜோதிபுரம்,கஸ்தூரிபாளையம்,விவேகானந்தபுரம்,யூனியன் டேங்க் பகுதிகளிலும்,தொப்பம்பட்டி,பன்னிமடை,சின்னத்தடாகம்,கணுவாய்,துடியலூர்,கவுண்டம்பாளையம்,உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் வி.ரகுநாதன், ராமதாஸ், குருடம்பாளையம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், அசோகபுரம், பிளிச்சி ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் டி.ரவி, ரங்கராஜ், ரமேஷ் குமார், சாவித்திரி ராஜன், சௌந்திரவடிவு தடாகம் ஆனந்தன், பெ.நா.பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எல்.என்.தனபால், ஒன்றிய நிர் வாகிகள் சசிகுமார்,பெ.நா.பாளையம், கூட லூர்,வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் குணசேகரன் ராமமூர்த்தி, மாரியப்பன், சுப்பிரமணியம்,கேஸ் கோவிந்தராஜ், சிக்கந்தர், ஆனந்தன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.



