fbpx
Homeபிற செய்திகள்மெய்யநாதன் தலைமையில் காவிரி நதியில் மருந்து பொருட்கள் கலப்பது குறித்து ஆய்வுக்கூட்டம்

மெய்யநாதன் தலைமையில் காவிரி நதியில் மருந்து பொருட்கள் கலப்பது குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்&காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் காவிரி நதியில் மருந்து பொருட்கள் கலப்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் லிஜி பிலிப் அளித்த அறிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சிறப்பு செயலாளர் ஜெயந்தி, மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img