சென்னையில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடக்கும் மாநில கிரிக்கெட் அணிக்கு ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் அணிக்கான தேர்வு கோவையில் நடந்தது. அதில் ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர் முகமதுசனூப் தேர்வாகி உள்ளார்.
சென்னைசேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று துவங்கிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர் முகமது சனூப் மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



