கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற என்.சி.சி தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை குரூப் கமாடர் LCS நாயுடு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விமான படை அதிகாரி விங் கமாண்டர் நிதின் முன்னிலை வகித்தார்.
கடந்த நவம்பர் 9 முதல் 18 வரை 10 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகா மில் தமிழகத்திலுள்ள 6 குரூப் என்.சி.சி அமைப்பைச் சார்ந்த 380 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சிக்கு தேவையான, பேச்சுத்திறமை, ஆளுமை, கலந்துரையாடல், ராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் இந்திய அரசி யலமைப்புச் சட்டம் மற்றும் தனித்திறமை வகுப்புகள் எடுக்கப்பட்டது.
மேலும் இப்பயிற்சி முகாமிற்கு 11 என்சிசி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். முகாமினை வழிநடத்தி இறுதியில் தேர்வுகள் நடத்தி, அடுத்த கட்ட அளவில் நடைபெறும் தலைமைப் பண்பு பயிற்சி முகாமிற்கு மாணவர்களை தேர்வு செய்தனர்.
சிறப்பு விருந்தினர் கர்னல் நாயுடு கூறுகையில், இம்முகாம் உங்களுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. ராணுவம் மற்றும் எந்த ஒரு சிறந்த பணி யிலும் சிறந்து விளங்க தலைமைப் பண்பு அவசியம் என வலியுறுத்தி பேசினார்.
இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
இதில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் முதல்வர் ஜெயா, என்.சி.சி அலுவலர்கள் ஜெய்னுலாப்தீன் மற்றும் ரவிக்குமார் மற்றும் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



