fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களை பரிசோதனை செய்ய மருத்துவக் குழு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தகவல்

மாணவர்களை பரிசோதனை செய்ய மருத்துவக் குழு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தகவல்

மருத்துவக் குழுவினர் மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து, விடுதிகளில் தங்கும் மாணவர்களும் நிலை யான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிப்பு அலு வலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று திருப்பூர் மாவட்ட் ஆட் சியர் டாக்டர் எஸ். வினீத் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு அறிவித்துள்ள கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறை களை முழுமையாக பின்பற்றி பாதுகாப்புடன் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடை பெறுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் நேற்று (செப்.1) ஆய்வு மேற் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கோவிட்-19 நிலையான நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையுடன் பாதுகாப்பாக வகுப்புகள் செப்.1 முதல் நடைபெற தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 187 அரசுப் பள்ளிகள் மற்றும் 54 தனியார் பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில், 66,761 மாணவ, மாணவிகளும், தனியார் பள்ளியில் 56,135 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் தனி யார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடை பெறுவதையொட்டி கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்ய தனித்தனியாக அனைத்து வட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு வகுப்பறைக்கு 20 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரிந்திரிப்பதை உறுதிப்படுத்தி, தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்து, வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.

வகுப்பறையில் மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.

மருத்துவக் குழுவினர் மாணவ மாணவிகளை பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து, விடுதிகளில் தங்கும் மாணவர்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்று வதை கண்காணிப்பு அலு வலர்கள் ஆய்வு செய்வார்கள்.

தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி யினை கடைபிடித்து பயணம் செய்வதை தினந்தோறும் ஆய்வு செய்வார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவி களுக்கு வழங்குவதற்கு தேவையான அளவு ஜிங்க் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வட்டத்திலுள்ள வருவாய் ஆய்வா ளர்கள், காவல் உதவி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் இணைந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img