fbpx
Homeபிற செய்திகள்மருதம் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்

மருதம் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தலைவர் யு.ஏ.வெங்க டாசலம், மண்டல மேலாளர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது,

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ், கடந்த 86 ஆண்டுகளாக தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவ தும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற் பனை நிலையங்கள் மூலமாக சந்தைப் படுத்தி நெசவாளர்களுக்கு பேரு தவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரிய மாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.

கைத்தறி ரகங்களுக்கு -கோ ஆப்டெக்சின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சார்பில் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தீபாவளி 2021 சிறப்பு விற்ப னைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவர் அணி யும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள்; ஆர்கானிக் பருத்தி சேலைகள், மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏரா ளமாக உள்ளன.

கோவை மருதம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.7.2 கோடியும் ஆர்.எஸ்.புரம் விற் பனை நிலையத்துக்கு ரூ.65 லட்சமும் காந்திபுரம் விற்பனை நிலையத்துக்கு ரூ.1.5 கோடியும் வண்ணமலர் கோஆப்டெக்ஸ் நிலையத்துக்கு ரூ.1.3 கோடியும் ஸ்ரீ பாலமுருகன் கோஆப்டெக்ஸ் நிலையத்துக்கு ரூ.1.5 கோடியும் 2021 தீபாவளி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img