கோவை சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சாவரா பள்ளி அருகே கோவை வடக்கு இண்டர்வீல் கிளப் மற்றும் சாவரா வித்யாலயா பள்ளி சார்பில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இதற்கு இண்டர்வீல் கிளப் தலைவி மீட்டா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ப.ரங்கராஜ், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கவுண்டம்பா ளையம் சட்டமன்ற தொகுதி உறுப் பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந் துக்கொண்டு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். ஆர்.வி.சி.நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கவிசரவணகுமார், முன்னாள் சேர்மன்கள் வீரபாண்டி விஜயன், கோவனூர் துரைசாமி, முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, கே.பி.கே.கலாமணி, வார்டு கவுன்சிலர்கள் சித்ரா பழனிசாமி, பிரியா இளங்கோவன், பிரியா அசோக், நிர்வாகிகள் ஐயாசாமி, கணுவாய் தேவராஜ், திருவள்ளுவர் நகர் காளிமுத்து, கேபிள் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்க இயக்குநர் ரவி, மனோகரன், சுப்ரமணியன், பள்ளி தாளா ளர் பிரான்சிஸ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜான், மாணிக்கவாசகம், இண்டர்வீல் கிளப் நிர்வாகிகள் மீனாட்சி அங்கப்பன், மஹாலட்சுமி, பிரிதி, உமா, விஜ்யலட்சுமி, ஊராட்சி செயலர் கோபி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



