கோவை காருண்யா நகரில் பெதஸ்தா பிரார்த்தனை மையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் உள்ள சிறுவாணி மலையடிவாரத்தில் பெதஸ்தா பிரார்த்தனை மையம் இயங்கி வருகிறது.
இது, 1993-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள், மறைந்த டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் மற்றும் இயேசு அழைக்கிறார் நிறுவனத் தின் தலைவரும், காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், சீஷா தொண்டு நிறுவனத்தின் தலை வருமாகிய டாக்டர் பால் தினகரன் ஆகியோரால் நிறுவப்பட்டது.
இந்த பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் மனசாந்தி பெறுவ தற்கான அழகிய சுற்றுச்சூழல் உரு வாக்கப்பட்டுள்ளது. அழகிய புல் வெளியும், மரங்களும், பூச்செடிகளும் மலர்ந்துள்ள இந்த வளாகத்தில் ஐந்து பிரார்த்தனை மண்டபங்கள் அடங்கிய பெதஸ்தா குளம் மிகவும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதை சுற்றிலும் மிக பிரம்மாண் டமான பிரார்த்தனை மண்டபம் ஒன்று. ஜாதி, இன, மத வேறுபாடின்றி பக்தர்களும் மற்றும் யாவரும் இறை தியானம் செய்து மன அமைதி பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான கட்டிடம் புதுப் பிக்கப்பட்டு, மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
இதில் அழகிய வர்ணப் படங்கள், வெள்ளை நிற சிலுவை ஒன்றும் தியானத்திற்காக நிறுவப்பட்டுள்ளது. அதை சுற் றிலும் மக்கள் பிரார்த்தனை செய்யும் தரிசன மையம் மற்றும் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் வர்ண காட்சிகள் கொண்ட ஏழு சிலுவை தியான உருவச் சிலைகளும் காண்போரின் உள்ளத்தை உருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் யாவருக்காகவும் இந்த மையம் செயல்படுகிறது. இங்கு தங்கும் வசதிகளும், உணவகங்களும், குழந்தைகள் விளையாடும் பூங்காவும் உள்ளன. சிறுவாணி அருவிக்கு செல் லும் அனைவருக்கும் காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா ஜெப மையம் அடையாளமாக விளங்குகிறது.
காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா ஜெப மையத்தின் பிரார்த்தனை அரங்கத்தை கோவை சி.எஸ்.ஐ. திருச்சபையின் பேராயர் மாமறை திமோத்தி ரவீந்தரின் பிரார்த்தனையால் அர்ப்பணிக்கப் பட்டது. டாக்டர் பால் தினகரன் முன்னிலை வகித்தார்.
இயேசு அழைக்கிறார் ஆன்மீக நிறுவனத்தின் ஊழிய அதிகாரிகள், காருண்யா பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், சீஷா தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரார்த்தனை செய்ய உதவும் அன்பானவர்கள் கலந்து கொண் டனர்.



