பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் நலச் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப் புசாரா நலவாரிய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட பொருளாளர் வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் முனியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட துணை பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரி நகரத்தில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன.
இத்தொழிலை நம்பி 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை, கேஸ், இன்சூரன்ஸ் பிரீமியம் போன் றவையும் உயர்ந்துள்ளன. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டு, கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வால், ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



