fbpx
Homeபிற செய்திகள்புளியம்பட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்

புளியம்பட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சரகத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி மற்றும் தாளவாடி வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு, மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், கேர் தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை புளியம்பட்டியில் நடத்தியது.

முகாமிற்கு கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பொது மருத்துவம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண், பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியா ளர்கள் 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குநர் எஸ்.புஷ்பநாதன், பி.வெல் மருத்துவமனை டாக்டர் தினேஷ் கிருஷ்ணா, வாசன் கண் மருத்துவமனை குழுவினர், ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவக் குழுவினர், புளியம்பட்டி மற்றும் தாளவாடி வட்டார கூட்டுறவு சார்பதிவாளர்கள்/கள அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img