fbpx
Homeபிற செய்திகள்“புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தாக்க மையம்” தொழில் கொடுக்கும் தலைமுறையை உருவாக்கும் திட்டம்

“புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தாக்க மையம்” தொழில் கொடுக்கும் தலைமுறையை உருவாக்கும் திட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தாக்க மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

“அனைவருக்கும் அனைத்தும்” என்ற உன்னத இலட்சியத்தை முன்வைத்து பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
புதுயுக தொழில் முனைவிலும் அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி, அனைத்து சமூகத்திற்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்திற்குமான வளர்ச்சி என்ற சமூக நீதி சிந்தனையின் அடிப்படையில் பல திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்த வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

“தடை அதை உடை”
இளைய தலைமுறையினர் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் “ஆடுகளம்” சவால்களை சந்திக்க கற்றுத்தரும் “தடை அதை உடை” போன்ற பல நிகழ்வுகள் இந்த வட்டார மையங்களின் வழி நடைபெறும்.

மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் புத்தொழில் நிறுவனர்கள் இம்மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக அரசின் 2022-23 நிதி அறிக்கையில், தமிழ்நாட்டில் புத்தொழில் வளர்ச்சிக்காகவும், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க நகர்ப்புற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும், கிராமப்புற மாவட்டங்கள் (Tier 3 and 4 Cities) தொழில்முனைவோர்களை உருவாக்கவும், புத்தாக்கங்களை புதுத்தொழிலாக மாற்ற உதவி செய்ய தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) மூலம் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வட்டார புத்தாக்க மையங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதன் அடிப்படையில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக அமைக்கப்பட்டது.

டான்சிம் நோக்கம்
இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே Startup TN என கூறப்படும் டான்சிம்-ன் நோக்கம். தொழில்முனைவோர்கள் தொழில் மேம்பட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் தொழில் திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வட்டார மையங்கள் மூலமாக நடத்தப்படும்.

தொழில் தேடும் தலைமுறை போய் தொழில் கொடுக்கும் தலைமுறை உருவாக்க இந்த வட்டார மையம் அயராது உழைக்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

“மக்களுடன் நேரடியாக இணைப்பு தளம்”
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் தொழில்முனைவோர் பழனிவேல்ராஜன் தெரிவித்தத £வது: கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறேன்.

திருநெல் வேலியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூரல் பாஸ்கட் (Rural Basket) என்கிறStartup நிறுவனத்தை தொடங்கி இந்த நிறுவனத்தின் முதல்வராக இருந்து வருகிறேன்.

எங்கள் நிறுவனம் மூலம் தொடர்ந்து புதுமையான தொழில் முயற்சியை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பல விவசாயிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களின் சொந்த தயாரிப்பு பொருட்களை வாங்கி நேரடியாக மக்களுக்கு இயற்கையான பொருட்களை கொண்டு செல்லும் ஓர் இணைப்புதளமாக செயல்பட்டு வருகிறோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் Startup TN மூலமாக தொடங்கி உள்ள வட்டார புத்தொழில் மைய திட்டம் எங்களைப் போன்ற தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கப் போகிறது.

ஏனென்றால் எங்களைப் போன்றவர்களுக்கு சரியான ஒரு வழிநடத்துதல் இல்லாததே தொழில்முனைவோராக வெற்றி பெற பிரச்சினையாக இருக்கிறது. அதற்கு இந்த புத்தொழில் மையம் உறுதுணையாக இருக்கும்.

இதன் மூலம் புத்தொழில் மையம் தொழில்பெருகி அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த அருமையான திட்டத்தை தமிழக தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்களுடைய உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தொகுப்பு:
இரா. ஜெய அருள்பதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி.

படிக்க வேண்டும்

spot_img