fbpx
Homeபிற செய்திகள்பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாவட்ட இறகுப்பந்து போட்டி

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாவட்ட இறகுப்பந்து போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற் கல்வி துறை மற்றும் தேசிய சேவை திட்டம் சார்பாக இளைஞர்கள் எழுச்சி நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரத ரத்னா கிறியி அப்துல்கலாம் பேட்மிண்டன் ரோலிங் ட்ராபி போட்டிகள் நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் மாண வர்களு டன் பேட்மிண்டன் விளையாடி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 128 அணிகளாக வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 18வயதுக்கு உட்பட் டவர்கள், 40வயதிற்கு மேற்பட் டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக பல்கலைக் கழகத்தின் சார்பில் உடற் கல்வி துறை தலைவர் மற் றும் பதிவாளர் முனைவர் முருகவேல், துணைவேந்தர், பேராசிரியர்கள் மாண வர்களுக்கு மூலிகை முகக் கவசங்களை வழங்கினர்.

இதில் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img