மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிறுவ னர் வழிகாட்டி மணி கண்டன் கூறியதாவது:
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு “தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்…” என்ற அவரது எழுத்து வரிகளை நினைவு கூர்ந்தேன். அதன்படி மதுரையில் மூன்று மாநகராட்சி முதி யோர் இல்லங்களுக்கு எனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து அறக் கட்டளை சார்பில் தலா 25 கிலோ அரிசி வழங்கினேன்.
மாநகராட்சியின்கீழ் செயல்படும் சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் கிரேசியஸ், கீரைத்துறை முதியோர் இல்ல மேலாளர் மோகன், தானப்ப முதலி தெரு முதியோர் இல்ல மேலா ளர் இந்திரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சமூக ஆர் வலர்கள் அசோக்குமார், கண்ணன் பங்கேற்றனர்
ஆதரவற்ற முதியோர் பலர் உணவுக்கு வழியின்றி மதுரையில் பல்வேறு முதியோர் இல்லங்களில் தஞ்சமடைவது அதிகரித்து வருகிறது.
மதுரையில் பல பகுதிகளில் மாநக ராட்சி வழங்கிய இடங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த இல்லங் கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இவற்றில் நம் அறக்கட்டளை சார் பில் தொடர்ந்து பல நற்பணி கள் செய்து வருகிறோம் என்றார்.



