fbpx
Homeபிற செய்திகள்பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியாவின் பாதுகாப்பான நடைமுறை வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்

பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியாவின் பாதுகாப்பான நடைமுறை வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்

மலேசியன் பனை எண்ணெய் கவுன்சில்(MPOC) வாடிக்கையாளர்களுக்கு நடத்திய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் மருத்துவ, ஊட்டச் சத்துத் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பேசினர்.

இந்த நிகழ்ச்சிகள் கடந்த16-ம் தேதி விசாகப்பட்டினம், 17-ம் தேதி, விஜயவாடா 18-ல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இந்த வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின் மையக்கரு, ‘பனை எண்ணெயின் மருத்துவ, ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியா முன்னெடுத்து வரும் இணக்கமான, பாதுகாப்பான நடைமுறைகள்’.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் இல்லத்தரசிகள், செஃப், தொழில்முனைவோர், ஃபிட்னெஸ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பனை எண்ணெய், அதன் நன்மைகள், உணவு உள்பட அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறித்துத் தங்களுடைய அறிவை நிபுணர்களும் வல்லுநர்களும் பகிர்ந்து கொண்டனர்.

நம்முடைய டயட்டில் ஏற்படுத்தும் சிறிய மாறுதல்கள் எப்படிப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த டாக்டரும் பேராசிரியருமான கேத்தன் மேத்தா தெரிவித்தார்.

மும்பையின் நம்பகமான மருத்துவமனைகளில் இதயவியல் – சுவாச நிபுணர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணராகக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் பேசினார். “உணவு குறித்த நமது தேர்வுகள் முக்கியமானவை.

அதன் மூலம் நம்முடைய இதய நலனை பெருமளவு மேம்படுத்த முடியும்” என்றார். மலேசிய பனை எண்ணெய் தொழிலும், MPOC -யும் முன்னெடுத்துள்ள வேலைகளைப் பற்றி இந்தியா, வங்கதேசம், நேபாளம், இலங்கை நாடுகளுக்கான MPOC தலைவர் பாவ்னாஷா விளக்கினார்.

மலேசிய பனை எண்ணெய், அதன் மற்ற தயாரிப்புகள் குறித்து வாடிக் கையாளர்களுக்கு பாவ்னா விளக்கினார்.

மலேசிய நாடும் MPOC-யும் பனை எண்ணெய் உற்பத்திக்குக் கடைபிடிக்கும் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பான நடை முறைகள், பொருளாதார – தொழில் நுட்ப சாதகங்கள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img