ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய காலிங்கராயன் தீபத் திருவிழா காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன் சிலை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மொடக் குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன தலைவர் சுபிதளபதி வாழ்த்துரை வழங்கினார்.
1008 விளக்கு ஏற்றிகாலிங்கராயன் வாய்க்காலில் வழிபாடு செய்தனர். காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம் பஞ்சலிங்கம் உழவர் மன்றம் காலிங்கராயன் பாசன சபை காலிங்கராயன் மதகு பாசன சபை கூட்டமைப்பு காலிங்கராயன் அறக்கட்டளை ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.



