தோஷிபா இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் (TIPL) நிர்வாக இயக்குநராக ஷூய்ச்சி ஈட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் TIPL நிறுவன குழுமத்தின் எனர்ஜி மற்றும் சோஷியல் இன்ஃப்ராஸ்டிரக்சர் தொழில்களுக்கு தலைமை வகித்து அவற்றை வளர்ச்சி யடையச் செய்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல் வதற்கு ஈட்டோ வழி வகுப் பார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக TIPL நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த டோமோஹிக்கோ ஒக்கா டாவைத் தொடர்ந்து ஈட்டோ இப்பதவியை ஏற்றுள்ளார்.
ஒக்காடா பேசும்போது, இந்தியாவில் நான் பதவி வகித்த இந்த 30க்கும் மேலான ஆண்டு காலத்தில், இந்திய-ஜப்பான் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் முதலீடுகள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.
தோஷிபா நிறுவனம் இந்திய அரசின் முன்னெடுப்புகளான மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்களுக்கு முக்கிய பங்கினை வழங்கியது.
இந்தியாவிற்கான தோஷிபாவின் ஆதரவினை மேலும் சிறப்பாக வழங்கி, TIPL நிறுவனத்தை அதன் புதிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டு செல்ல ஈட்டோ மிகச்சரியான நபராவார் என்றார்.
ஈட்டோ பேசியதாவது: நிலையான வளர்ச்சியை எட்டத்தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை இந்தியாவிற்கு வழங்க தோஷிபா நிறு வனம் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும்.
ஒக்காடாவைத் தொடர்ந்து இந்த பொறுப்பினை வகித்து, இந்தியாவிற்கு தோஷிபா நிறுவனம் அளித்துள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடனான நீண்ட கால நல்லு றவை மேலும் வலுப்படுத்தி, இந்தியா உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்க இந்நாட்டிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை துவங்க தோஷிபா உதவும் என்றார்.
தோஷிபா நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் ஆற்றல் சார் உட்கட்டமைப்பு தொழில்துறையில் சர்வ தேச செயல்பாடுகள், தொழில் மேம்பாடு, விற்பனை மற்றும் இதர வர்த்தக பணிகள் உள் ளிட்ட பல்வேறு தலை மைப் பதவிகளை ஈட்டோ வகித்துள்ளார்.



