fbpx
Homeபிற செய்திகள்தொழில் வளர்ச்சிக்கு அரசுகளுக்கு பாராட்டு

தொழில் வளர்ச்சிக்கு அரசுகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு குறு சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான ‘TANSTIA’ நிர்வாகக் குழு கூட்டம், கோவை கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நடந்தது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.

‘TANSTIA’ தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுருளிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறு சிறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

தொழில்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்கு உண்டான வழிவகைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘கிளஸ்டர்’ திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின்(COSIEMA) தலைவர் நல்லதம்பி, தமிழ்நாடு கிரில் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TAGMA)
தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img