டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழிலாளர் துறை முதன்மைச் செயலாளர்/ ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கிர்லோஷ் குமார், மாவட்ட தொழிலாளர் கூடுதல் மற்றும் இணை ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



