மூளையின் பகுதிகளைத் துல்லியமாக காட்சிப்படுத்தும் அதிநவீன எஃப்எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, தென் தமிழகத்தில் முதன்முறையாக கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. வழக்கமான மனித செயல்பாட்டுக்கு மூளையின் சில பகுதிகள் மிகவும் அத்யாவசியமானவை. அதே சமயம் சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றிவிடமுடியும்.
ஒரு கட்டியை அகற்றும்போது அல்லது கைகால் வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது இது முக்கியத்துவம் பெறுகிறது.
எம்ஆர்ஐ, சிடி முதலான வழக்கமான இமேஜிங் முறைகள் இப்பகுதிகளை துல்லி யமாக காட்சிப் படுத்த இயலாது. ஒரு முக்கிய பகுதியில் ஏதேனும் காயமேற்பட்டால் அதனால் நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படலாம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக வழக்கமான எம்ஆர்ஐ ஸ்கேன் உடன் அதிநவீன கம்ப்யூட்டர்கள் ஒருங் கிணைக்கப்பட்டு ஸ்கேன் எடுக்கப்படுகிறது.அப்போது முக்கியமானபகுதிகள்தெளிவாகவரையறுக்கப்படுகின்றன. கை, கால், முதலான முக்கிய உடல்பகுதி செயல்பாடு களுக்கு காரணமான பகுதிகளை துல்லியமாக அடையாளம் கண்டறியும் அதிநவீன முறையே ஃபங்ஷனல் எஃப்எம்ஆர்ஐ (திuஸீநீtவீஷீஸீணீறீ விஸிமி -திவிஸிமி) என்றழைக்கப்படுகிறது.
கேஎம்சிஹெச்-ல் டாக்டர் ஸ்ரீராம் வரதராஜன் தலைமையில் நரம்பியல் கதிரியக்க சிகிச்சை துறை செயல்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுண ர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் சிறந்த முறையில் மருத்துவ சேவை ஆற்றுவதற்கு உதவிகரமாக பிரத்யேக துணை மருத்துவப் பிரிவுகளை உருவாக்கும் இந்தியாவின் ஒரு சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கேஎம்சிஹெச் மருத்துவமனையும் ஒன்று என்று கதிரியக்க சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் குறிப்பிட்டார்.
கிளினிக்கல் நியூரோ சயின்ஸ் துறையில் இதுவோர் முக்கியமான மைல்கல் நிகழ்வு என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தெரிவித்தார்.
இத்தகைய அதிநவீன மருத்துவ வசதியை இந்த பிராந்தியத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியதின் மூலம் கேஎம்சிஹெச் முன்னுதாரணமாகத் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அதிநவீன மருத்துவ வசதியை கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்த செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனி சாமி, கேஎம்சிஹெச் மருத் வமனையில் அளிக் கப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கு நாடுகளின் சிறந்த மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறந்த தரமானவை என்று குறிப் பிட்டார்.



