தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள 2 தமிழ் நாடு பீரங்கி தேசிய மாணவர் படை அமைப்பின் சார்பாக, கமாண்டர் கர்னல் சந்திரசேகர் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பகுதிகளில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டு ,சுமார் 1000 கிலோ எடையுள்ள குப்பையை சேகரித்தனர்.
நிகழ்வில் கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி ,பி.எஸ்.ஜி. கலை கல்லூரி, பிஷப் அப்பாசா மிகலைக் கல்லூரி, ரத்தினம் கலைக்கல்லூரி ,புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி, பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளி, வெங்கட லெட்சுமி மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிலையங்களில் இருந்து சுமார் 150 தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படை அலுவலர்களான சுதாகர், ஆல்பர்ட் அலெக்சாண்டர், ராகிணி, ராணுவ அதிகாரிகளான சுபேதார் குல்வந்த்சிங், நாயக்சுபேதார் சக்தி, ஹவில்தார் ஜோஸ், விவேகானந்தன், சாகர் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை வழிநடத்தினர்.



