தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் சரவணன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் தூத்துக்குடி இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.



