fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நோவா 2கே21 கல்லூரி வளாகத்தில் நேற்று (நவ.10) நடந்தது. இக்கண்காட்சியில் பல்வேறு துறையைச் சார்ந்த 400 மாணவர்கள் மொத்தம் 121 படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியில் நடுவர்களாக சென்னை, இன்பினிடி சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் நிறுவன சீனியர் சாப்ட்வேர் இன்ஜினீயர் என்.சதீஸ்வரன், திருப்பூர் ஸ்ரீ சாஸ்தா பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் தங்கராஜ் சுப்பிரமணி ஆகியோர் பணியாற்றினர்.
இறுதியாண்டு மாணவர் என்.கதிரேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.ரமேஷ்குமார் பேசும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல தளத்தையும், வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது.

அனைத்து மாணவர்களும் தங்களது படைப்பாற்றலைப் பயன்படுத்தி படைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் என்றார். கல்லூரித் தலைவர் எம்.கோவிந்தசாமி பேசும்போது, மாணவர்களின் கண்டுபிடிப்புகள், படைப்புகள் மக்களுக்கு உபயோக ப்பட வேண்டும் என்றார்.

கல்லூரி துணைத் தலைவர் டி.கே.கருப்பணசாமி பேசும்போது, பொறியா ளர்களுக்கு படைப்பாற்றல் என்பது மிகவும் அவசியம் என்றார்.

கண்காட்சியில் இயந்திரவியல் துறை மாணவர்கள் சூரிய சக்தியில் செயல்படும் மின் வாகனம், தானியங்கி விதை இடும் இயந்திரம், கட்டடவியல் துறையினர் நெகிழியைப் பயன்படுத்தி செய்த செங்கல், சுத்திகரிப்பு நிலையத்தின் மாதிரி, குழாய் விவசாயம் மாதிரி, கணினி துறையினர் தானியங்கி பிழை கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இயந்திரம், மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறையினர் ராணுவத்தில் பயன்படும் ரேடார் அமைப்பு, தானியங்கி கணக்கிடும் அமைப்பு மற்றும் தானியங்கி குறுஞ்செய்தி அனுப்பும் இயந்திரம், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையினர் குறைந்த மின்சாரத்தில் செயல்படும் மின்விசிறி, எளிய முறையில் உழவு செய்யும் கருவி, மேலாண்மை துறையினர் ஸ்மார்ட் நகரத்தின் மாதிரி வடிவம், ஃபேஷன் டெக்னாலஜியினர் தென்னை நாரில் செய்த விரிப்பு, இதயத்துடிப்பின் அளவை கண்காணிக்கும் உடை, பல்வேறு நிறங்களில் அச்சிடப்பட்ட உடை போன்றவற்றை காட்சிப்படுத்தினர்.

சிறப்பான படைப்பாற்றல்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இரண்டாம் ஆண்டு மாணவர் ரமேஷ் நன்றி கூறினார். கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.அன்பரசு இதற்கான ஏற் பாடுகளைச் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img