fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால சாதனைகள் கண்காட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

திருப்பூரில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால சாதனைகள் கண்காட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்

பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டு அரசியல் அரசு பணி நிறை வடைந்ததை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்டத்தின் சார்பாக குமார்நகர் வலையங்காடு பகுதியில் அமைந்துள்ள சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் அவரது சாதனைகள் விளக்கும் மோடி 20 / 20 இரண்டு நாட்கள் கண்காட்சியும், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பாக அமைப்புசாரா தொழிலாளர் இலவச பதிவும் நடைபெற்று வருகிறது.

சிறப்பு அழைப் பாளராக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், குமரன் சாலையில் வடக்கு காவல் நிலையத்தின் எதிரில் அமைந்துள்ள அவர் அடிபட்டு விழுந்த இடத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மலரஞ்சலியும் அண்ணாமலை செலுத்தினார்.

மேலும் குமார் நகர் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பின்பு மாற்றுக் கட்சியினர். கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, (எ) சின்ன கவுண்டர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் இணைத் துக் கொண்டனர் .

முக்கிய நிர்வாகிகளான ஆர்.சுந்தரம், ஜி.விஜய் ஆனந்த், தி. கலையரசன் ஆகி யோரும் இன்று அண்ணாமலை முன்னி லையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, அமைப்புசாரா பிரிவின் மாநில தலைவர் பாண் டித்துரை, தொழில் பிரிவின் மாநில தலைவர் நி.பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.சி.எம்.பி.சீனிவாசன் தெரு கதிர்வேல், காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட பொருளாளர் குணசேகரன், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகளும் பெருந் திரளான பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img