தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி, நேருநகர் பகுதியில் சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக இப்பகுதியில் வடிகால் வசதியில்லாத காரணத்தால் மழை வெள்ளம் வீடுகள், சாலைப்பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது.
இதுகுறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஷ்வரனிடம் முறையிட்ட பொதுமக்கள் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக, நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித்துறை அலுவலர்களையும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களையும், உள்ளூர் மக்கள் பிரநிதிகளையும் அழைத்து நான் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய், வடிகால் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.
அப்போது இப்பணியை நிறைவேற்றியிருந்தால் இன்றைக்கு இதுபோன்ற நிலைகள் ஏற்பட்டிருக்காதென அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு, சாக்கடை கழிவுநீர், மழைநீர் முற்றிலும் வெளியேறும் வகையில் தீர்வு ஏற்ப ட்டது. சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட இ.மா.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் மு.மனோகரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரமேஸ்வரி முத்து, சோனியா வெங்கடேசன்.
வார்டு உறுப்பினர் சக்தி மற்றும் நிர்வாகிகள் சின்னசாமி,எஸ். குமார், ரங்கநாதன், மோகன் குமார், கமலக்கண்ணன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



