தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் சமையல் எண்ணெய்,பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு, விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரியும் மக்கள் விழிப்புணர்வு பிரசார இயக்கம் தர்ம புரியில் நடைபெற்றது.
நகர காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பிரசார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் முன்னிலை வகித்தார்.
நகரத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்கக் கோரியும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி காளியம்மாள், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சென்னகேசவன், வட்டார தலைவர்கள் சரவணன், காமராஜ், சுபாஸ், முனுசாமி, மாதையன், ஜனகராஜ், வடிவேல், பூபதி ராஜா, ஆனந்தன், பேரூராட்சி தலைவர்கள் கணேசன், சமதர்மம், தக்காளி கணேசன், சேகர், வேடி, மணி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், முபாரக், நட ராஜன், மணிகண்டன்,இளங்கோ, முருகன், சிங்கராயன், அர்த்தநாரி, மாதேஸ், கோவிந்தசாமி, பச்சையப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பிற்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் நவீன் நன்றி கூறினார். இதேபோன்று வருகிற 29-ஆம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.



