ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட ஒன்றிய அரசையும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம் நடத்தும் மண்டல அளவிலான மாலை நேர கவன ஈர்ப்பு போராட்டம் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேரலாதன் அவர்கள் தலைமையில் நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மணி, செயலாளர் சுமதி, தர்மபுரி மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சிவகுமார் மற்றும் பிரபு, பொறுப்பாளர் குப்பு சாமி மற்றும் பலர் கோரிக்கைகள் பற்றி விளக்கமாக பேசினார் முடிவில் தர்மபுரி சத்யா நன்றி கூறினார்.



