fbpx
Homeபிற செய்திகள்தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்

பெட்ரோல்,-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரி சுத் தொகை அறிவிக்க வேண்டும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசையும், கோவை மாநகராட் சியையும் கண்டித்து கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்கட்சி கொறடாவும், எம்.எல். ஏ.,வுமான எஸ்.பி. வேலு மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்த சாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் ஆகியோர் உட்பட 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவ ரான இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img