Homeபிற செய்திகள்தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா உறுதி- 40 பேர் உயிரிழப்பு கோவையில் 4 ஆயிரத்தை...

தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா உறுதி- 40 பேர் உயிரிழப்பு கோவையில் 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் 1,57,732 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில், நேற்று 30,580 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு 31,33,990 ஆக காணப்படுகிறது.

கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று நேற்று 24,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதுவரை மொத்தமாக 28,95,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சென்னை – 6,383, கோவை – 3,912, செங்கல்பட்டு – 1,841, திருப்பூர் – 1,507, கன்னியாகுமரி -1,248, ஈரோடு – 1,220 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img