இந்தியாவின் முன்னணி ஆட்டோ மோட்டிவ் பிராண்டான டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில் மூன்று மிக நவீன விற்பனை நிலையங்களை (அவுட்லெட்கள்) தொடங்கி எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது.
கோவையில் திருச்சி சாலையிலும், உடுமலைப்பேட்டை நகரிலும் இரு புதிய விற் பனை நிலையங்களை SGA மோட்டார்ஸ் உடன் இணைந்து, டாடா மோட்டார்ஸ் தொடங்கியிருக்கிறது.
SR டிரான்ஸ்கார்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஈரோடு மாநகரில் புதிய 3S டீலர்ஷிப்பையும் (விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரிப்பாகங்கள்) டாடா மோட்டார்ஸ் இப்போது தொடங்கியிருக்கிறது.
இந்த விரிவாக் கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக டாடா மோட்டார்ஸின் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன. இப்புதிய அவுட்லெட்களோடு சேர்த்து இதன் வலுவான வலையமைப்பு, 77 விற்பனை தொடு முனைகள் கொண்டதாக உயர்ந்திருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர் ஷிப் தரநிலை நெறிமுறைகளின் படி இந்த ஷோரூம்கள், வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸின் நிபுணர்களது மேற்பார்வையின் கீழ், இப்புதிய டீலர்ஷிப்களின் பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
பயிற்சி பெற்ற இப்பணியாளர்கள், வருகையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இதன்மூலம் தரமான, இனிமையான, வாடிக் கையாளர் அனுபவத்தை வழங்குவார்கள்.
டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட்- ன் வலை யமைப்பு மேலாண்மை மின்சார வாகனங்கள் விற்பனைப் பிரிவின் முதுநிலை பொது மேலாளர் ரமேஷ் துரைராஜன் பேசும் போது, “கோவை, உடும லைப்பேட்டை, ஈரோடு ஆகிய நகரங்களில் மூன்று மிக நவீன அவுட்லெட்களை தொடங்கியிருப்பதன் வழியாக தமிழ்நாட்டில் எமது செயலிருப்பை வலுப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
எமது அங்கீகாரம் பெற்ற டீலர்களாக SGA மோட்டார்ஸ்,SR டிரான்ஸ்கார்ஸ் ஆகிய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு அவர்கள் கொண்டிருக்கும் வாகனச் சந்தை மீதான பரிச்சயத்தின் ஆதரவோடு இம்மாநிலத்தில் எமது வாகனங்கள் சென்றடையும் வீச்செல் லையை இன்னும் விரிவாக்கும்.
13.4% சந்தைப் பங்கினை (2022 மே மாதத்தின்படி) கொண் டிருக்கும் தமிழ்நாடு (புதுச்சேரி உட்பட), இந்தியாவில் எங்களது வளர்ச்சி திட்டத்தின் முக்கிய அங்கமாக தொடர்ந்து இருக்கிறது” என்றார்.



