fbpx
Homeபிற செய்திகள்தடகளப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி அசத்தல்

தடகளப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி அசத்தல்

சென்னையில் நடந்த ஏஎஸ்ஐஎஸ்சி தடகளப் போட்டி யில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவிகள் சப்ஜூனியர் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றனர். 19 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.

வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற இருக்கும் தேசிய தடகளப் போட்டியில் பங்கு பெற 12 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி விளையாட்டுத்துறை இயக்குநர் ஜேக்கப் தெரிவித்ததாவது: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிராந்திய அளவிலான தடக ளப் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து 1300 பேர் பங்கேற்றனர். இதில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் 26 பேர்.

பதக்கம் வென்றவர்கள்:
சப்-ஜூனியர் பெண்கள்: 80 மீட்டர் ஓட்டம் ஜெலினா அபிகேல் (தங்கம்), 100 மீ. எல்.கிரிஷ்னியா (வெள்ளி), ஷாட்புட் கே.வரலேகா (தங்கம்), மாஹி சி ஷா (வெள்ளி), நீளம் தாண்டுதல் ஜெலினா அபிகேல் (தங்கம்), டிஸ்கஸ் த்ரோ மாஹி சி ஷா (தங்கம்), கே.வரலேகா (வெள்ளி), உயரம் தாண்டுதல் ஜெலினா அபிகேல் (தங்கம்), 400 மீ. தொடர் ஓட்டம் அண்ட்ரியா கேக்கப் (தங்கம்), ஜோஸ்திதா பி ஐயர் (தங்கம்), ஜெலினா அபிகேல் (தங்கம்), எல்.கிரிஷ்னியா (தங்கம்).

சப்-ஜூனியர் ஆண்கள்:
ஷாட்புட் எஸ்.கே.பிரசன்னா ஸ்ரீஹரி (வெள்ளி), டிஸ்கஸ் த்ரோ எஸ்.கே.பிரசன்னா ஸ்ரீஹரி.

ஜூனியர் பெண்கள்:
ஷாட் புட் சக்தி ராஜாராம் (தங்கம்), 100 மீ. அகத்யா ரமேஷ் (வெள்ளி), உயரம் தாண்டுதல் ஜே.ஜெனல் பிலஸ்சினா (வெண் கலம்), டிஸ்கஸ் த்ரோ சக்தி ராஜா ராம் (தங்கம்), எஸ்.பி.சத்விகா (வெண்கலம்), 200 மீ. ஓட்டம் அகத்யா ரமேஷ் (தங்கம்), ஹேமர் த்ரோ சக்தி ராஜாராம் (தங்கம்).

சப்-ஜூனியர் ஆண்கள்:
ஹேமர் த்ரோ ஜான் வர்கீஸ் (தங்கம்), பெனோவின் சேவியர் (வெள்ளி), ட்ரிபிள் ஜம்ப் எம்.விஷால் (வெண்கலம்), டிஸ்கஸ் த்ரோ ஜான் வர்கீஸ் (வெள்ளி), எஸ்.பிஜின் (வெண்கலம்), ஈட்டி எறிதல் பெனோவின் சேவியர் (தங்கம்).

சீனியர் ஆண்கள்:
டிஸ்கஸ் த்ரோ சையத் மொஹம்மது அஸ்பத் (வெள்ளி), ஹேமர் த்ரோ ஹர்குன் சிங்ஆனந்த் (தங்கம்), ஷாட் புட் சையத் மொஹம்மது அஸ்பத் (வெண் கலம்), ஈட்டி எறிதல் சையத் மொஹம்மது அஸ்பத் (தங்கம்).

சீனியர் பெண்கள்:
டிஸ்கஸ் த்ரோ ஆர்.ஜனனி (தங்கம்), ஈட்டி எறிதல் திரிதி சி ஷா (வெண்கலம்), ஷாட் புட் ஆர்.ஜனனி (வெண்கலம்).
ஜூனியர் பெண்கள் பிரிவில் சக்தி ராஜாராம், சப்-ஜூனியர் பிரி வில் ஜெலினா அபிகேல் ஆகியோர் தனி நபர் சாம்பியன்ஷிப்பட்டத்தை வென்றனர்.

ஒட்டுமொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை சப்-ஜூனியர் பெண்கள் பிரிவு தட்டிச் சென்றது. அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை இப்பள்ளி மாணவர்கள் பெற்றனர்.

ஜெலினா அபிகேல், எல்.கிரிஷி னியா, கே.வரலேகா, மாஹி சி ஷா, எஸ்.கே.பிரசன்னா ஸ்ரீஹரி, சக்தி ராஜாராம், அகத்யா ரமேஷ், ஜான் வர்க்கீஸ், பெனோவின் சேவியர், சையத் மொஹம்மது அஸ்பத், ஹர்குன்சிங் ஆனந்த், ஆர்.ஜனனி ஆகியோர் புனேயில் வரும் நவம்பர் 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெற இருக்கும் தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img