டாடா ஏஐஜி (AIG) ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், டாடா ஏஐஜி க்ரிட்டி-மெடிகேர் என்ற மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 100 தீவிர நோய்களுக்கான கவரேஜ் மற்றும் ஹாஸ்பிடல் பணப் பலன்களை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளது.
டாடா ஏஐஜி க்ரிட்டி-மெடிகேர் நான்கு பிரிவு களின் கீழ், க்ரிட்டிகல் இல்னெஸ், புற்றுநோய் 360 டிகிரி இழப்பீடு, ஹாஸ் பிடல் கேஷ் மற்றும் வெல்சூரன்ஸ் பெனிஃபிட் (விருப்பத்துடன்) பல்வேறு கவரேஜ்-களை வழங்குகிறது.
டாடா ஏஐஜி க்ரிட்டி-மெடிகேர்-இன் க்ரிட்டிகல் இல்னெஸ் இரண்டு திட் டங்களை வழங்குகிறது. அதாவது ஸ்மார்ட் சென் சுரி பிரீமியர் பிளான் (100 தீவிர நோய்கள்) மற்றும் ஸ்மார்ட் ஹாஃப் சென்சுரி பிரீமியர் பிளான் (50 தீவிர நோய்கள்).
இவற்றில் காப்பீடு செய் யப்பட்ட நபருக்கு பட்டி யலிடப்பட்டவற்றில் ஏதேனும் தீவிர நோய் இருப்பது கண்டறியப் பட்டால் ஒரு மொத்தத் தொகையை செலுத்தும்.
டூ இட் யுவர்செல்ஃப் எனும் விருப்பத்தின் மூலம், பாலிசிதாரர் ஒரு பாலிசியின் கீழ் க்ரிட்டிகல் இல்னெஸ் மற்றும் புற் றுநோய் 360 டிகிரி ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.
தீவிர நோய் ஏதேனும் ஏற்பட்டால், சர்வைவல் காலத்தை 0/7/15 நாட்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை காப்பீடு பெற் றவர் பெறுகிறார்.
டாடா ஏஐஜி க்ரிட்டி மெடிகேர்-இன் தொடக்க விழாவில் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இன் கன்ஸூமர் லைன்ஸ்-இன் பிரெஸிடென்ட் மற்றும் தலைவர் பராக் வேத் பேசும்போது, “புதிய ‘டாடா ஏஐஜி க்ரிட்டி-மெடிகேர்’ தயாரிப்பின் மூலம், தீவிர நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சையின் அனைத்து நிலைகளுக்குமான விரிவான கவரேஜ்-ஐ வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
இத் தயாரிப்பு பல்வேறு தேவை களைப் பூர்த்தி செய்யவல்ல இணக்கத்தை வழங்குகிறது.
இதில் வாடிக்கையாளர், தீவிரநோய்களின் எண்ணிக்கை, பூஜ்ஜிய நாள் சர்வைவல் காலம், புற்றுநோய்க்கான தனி கவர் மூலம் அனைத்துமடங்கிய சிகிச்சை மற்றும் பெரிய / சிறிய அறுவை சிகிச்சை களுக்கான கவரேஜ் ஆகி யவற்றிலிருந்து தெரிவு செய்யலாம். காப்பீட்டுத் தொகையாக இரண்டு கோடி ரூபாய் வரை இருக் கும்” என்றார்.



