இந்தியாவின் முதன்மையான கேஸ்ட்ரோ என்ட்ராலஜி லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, புற்றுநோய் எக்ஸ்போ 2022- ஐ திறந்து வைத்து“Vayiru360.com” என்ற தனித்துவமான உரையாடும் மெய்நிகர் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022-2024) வரும் பிப்ரவரி 4ம் தேதி கொண்டாடப் படும் உலக புற்றுநோய் தினத்திற்கான கருத்து, “க்ளோஸ் த கேர் கேப்”(Close the Care Gap) என்பதாகும்.
உலக புற்றுநோய் தினத்தை குறிக்கும் வகையில், ஜெம் மருத்துவமனை புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்களை வீடியோ அல்லது பதிவுடன் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கிறது. சிறந்த ஊக்கமளிக்கும் சான்றுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும்.
ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், ‘பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆரம்பத்தில் தோன்றும் அறிகுறிகள் புறக்கணிக்கப்பட்டு, மிகவும் மேம்பட்ட நிலையில் மட்டுமே புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
ஜெம் மருத்துவமனை, புதிய உரையாடும் தளமான”Vayiru360.com” அறிமுகப்படுத்தியதன் மூலம், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்கு ஒருபடி மேலே சென்று முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறது. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி மட்டுமே என்று தவறான கருத்து உள்ளது.
புற்றுநோய்களில் பலவற்றிற்கு அறுவை சிகிச்சையே முதன்மை சிகிச்சையாக இருக்கும். ஆரம்பகால புற்றுநோய்களை குறிப்பாக ரோபோடிக் மற்றும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் குணப்படுத்த முடியும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஸ்கிரீனிங் சிறந்த வழியாகும்“ என்றார்.
ஜெம் மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் பார்த்தசாரதி கூறுகையில் “இந்த போர்டல்“Vayiru360.com” அனைத்து கேள்விகளையும் நிவர்த்தி செய்ய மிகவும் பயனர் நட்புடன் இருக்குமாறு உருவாக்கியுள்ளோம்.
அறிகுறிகள் இருப்பதாக அஞ்சும் எந்த ஒரு நோயாளியும் இந்த இணையதளத்தின் மூலம் இலவச ஆலோசனையை பதிவு செய்யலாம்“ என்றார்.
ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் பேசுகையில், “Vayiru360.com” ஐ பார்வையிடவும், நமதுவயிற்றுப் பகுதியில் ஏற்பட கூடிய அனைத்து வகையான புற்றுநோய்களை பற்றியும் புரிந்து கொள்ளுமாறு அழைக் கிறோம்“என்றார்.



