இந்தியாவின் நம்பர் ஒன் ஷார்ட்- வீடியோ தளமான மோஜ், திறமையான படைப்பாளிகள் மற்றும் பிரபலங்களுக்காக, முதல் பிரத்யேக அழைப்புடன் கூடிய நிகழ்வை ‘மோஜ் டேஅவுட்’ என்ற பெயரில் சேலத்தில் நடத்தியது. இந்த 61 படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.
ஒரு நாள் நிகழ்வின் போது, படைப்பாளிகள் உள்ளடக்கத்தை உருவாக்கும் யோசனைகளை பரிமாறிக்கொண்டனர். அவர்களின் நுண்ணறிவு திறமை, சிறிய வீடியோக்களை உருவாக்குவதற்கான எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவினார்கள். கூட்டு உள்ளடக்கத்தை உருவாக்கும் போது அவர்கள் தங்கள் உள்ளடக்க உருவாக்க கற்றல் மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
மோஜ் சேலத்தில் ‘மோஜ் டேஅவுட்’ என்பது போன்ற இன்னும் பல முயற்சிகளை தொடங்க விரும்புகிறது. இது நகரத்தின் திறமையான இளைஞர்களை இந்த தளத்தில் பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கவும் முன்னிலைப்படுத்தவும் விரும்புகிறது.
நிகழ்வை பற்றி மோஜ் மற்றும் ஷேர்சாட், உள்ளடக்க வியூகம் மற்றும் செயல்பாடுகளின் மூத்த இயக்குனர் ஷஷாங்க் சேகர் பேசியதாவது:
மோஜ்-ல் தமிழ்நாட்டிலிருந்து நிறைய பங்கேற்பு மற்றும் படைப்பு உள்ளடக்கத்தை நாங்கள் காண்கிறோம். சேலத்தில் நடந்த முதல் மோஜ் டேஅவுட்டுக்கு, அற்புதமான பங்கேற்பை கண்டோம். தமிழ் மொழியில் படைப்பாளிகள், உள்ளடக்கத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தையில் மேலும் வளர்ச்சியை காண்போம் என்றார்.
சேலத்தைச் சேர்ந்த மோஜ் பிரபலமான லோகேஷ் கூறுகையில், எங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களிடம் பகிந்து கொள்ளவும் அதை பற்றி உரையாடவும், கற்றுக்கொள்ளவும் மற்றும் திறன்களை மேம்படுத்தவும் அனுமதிக்கும் இத்தகைய செயல்பாடுகளை துவக்கியதற்காக மோஜ் -க்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
பங்கேற்ற படைப்பாளிகள் நடனம், நகைச்சுவை, நடிப்பு போன்ற பல்வேறு உள்ளடக்க வகைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அங்கு #இமைக்காரியே, #மாஞ்சா, #சலோமியா, #பீயிங்தமிழா, #சின்ராசு, #சக்தி இருக்கவரைக்கும் போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாக உள்ளன.
சேலத்தில் இருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல படைப்பாளிகளில் பிரியங்கா மஸ்தானி, அஜய் டி குரூஸ், ஹரிஷ் கிரிஷ் ஆகியோர் அடங்குவர்.



