fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் நடைபெற்ற மூலிகை ஆராய்ச்சியில் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள்...

சேலத்தில் நடைபெற்ற மூலிகை ஆராய்ச்சியில் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் முதலிடம்

தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேலம் காரிப்பட்டி ஏபிஎஸ் மூலிகை ஆராய்ச்சி மைய கூடத்தில் வகுப்புகள் நடைபெற்றது.


இந்த வகுப்பிற்கு தாவரவியல் மூலிகை ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தாவரவியல் மூலிகை ஆராய்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகுப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க தாவரவியல் மூலிகைச்செடிகள் விவரங்கள் குறித்தும் அதன் மருத்துவப் பலன்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கு டாக்டர் பாலசுப்பிரமணியம் விரிவாக எடுத்துக் கூறினார். மற்றும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.


கல்லூரி மாணவ மாணவிகள் 10 நாட்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக கடந்த 7ம் தேதி மாணவ மாணவிகள் ஆராய்ச்சி செய்ததை சித்த மருத்துவர்கள் முத்துக்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ் வரி, ரஞ்சிதா, முனைவர் பொன்னம் பலம் ஆகியோர் ஒன்றிணைந்து ஆய்வு நடத்தினர்.


அந்த ஆய்வில் சுமார் 71 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ஆய்வில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி பயிலும் மாணவி சத்யா முதலிடமும் டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி மாணவன் தினேஷ் இரண்டாம் இடமும் பெற்றனர்.


ஆய்வு இறுதியில் சித்த மருத்துவர் முத்துக்குமார் மற்றும் மருத்துவர் ஜெகதீஸ்வரி ஆகியோரால் முதல் மற்றும் இரண்டாம் தர வரிசை அறிவிக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியின் சேர்மன் மருத்துவர் அசோக்குமார், தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். ஆய்வில் சாதனை படைத்த மாணவிகள் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் இந்த மூலிகை ஆராய்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளை ஆராய்ச்சி செய்து அதை கல்லூரி நிர்வாகத்தில் 200க்கும் மேற்பட்ட செடிகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்தோம்.

அந்த ஆய்வில் எங்களை தேர்வு செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஏபிஎஸ் மூலிகை ஆராய்ச்சி மையத்திற்கும் என்னுடைய சார்பாகவும் எங்கள் கல்லூரி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் நாங்கள் மருத் துவ பயிற்சிக்கு செல்லும் பொழுது மற்றும் மருத்துவப் பணிக்கு செல்லும்போது எங்க ளுக்கு எளிதாக பயனுள்ளதாக இருக்க இந்த பயிற்சி உதவும் என்று தெரிவித்தனர்.


இறுதியாக கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லாவண்யா, கலையரசி ஆகி யோர் நன்றி கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img